அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டதாக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 29 தொழிற்சாலைகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 6 கோடியே 88 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அங்குள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேதிபொருள் தயாரிப்பு நிறுவனம், ரசாயன தோல் தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என 29 தொழிற்சாலைகளில், சுத்திகரிக்கப்படாமல் கழிவு நீர் வெளியேற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுற்றுச்சூழலுக்கு அதிகளவில் மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 29 தொழிற்சாலைகளுக்கும், தகுதிக்கு ஏற்ப மொத்தமாக 6 கோடியே 88 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.