மத்திய பட்ஜெட்டில் ஆத்திச்சூடி, திருக்குறளை மேற்கோள் காட்டியது தமிழுக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை நிரூபிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருப்பதி எழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதேபோன்று பிரதமர் மோடியும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், பட்ஜெட் குறித்து விமர்சிக்க கமல்ஹாசன் பொருளாதார மேதை இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.