தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி துவக்கி வைத்தார்.
எந்த ரேசன் கடைகளிலும் பொருட்கள் வாங்க வழிவகை செய்யும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை சோதனை முறையாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் செயல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் நியாயவிலை கடையில் இந்த திட்டத்தை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் சந்திப் நந்தூரி, ஒரே வருவாய் கிராமத்திற்குள் உள்ள மற்ற ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாது என்று குறிப்பிட்டார்.