தமிழக சிறைகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து சிறைத் துறை துணை தலைவர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைத் துறை தலைவர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், சிறைகளில் நடைபெறும் பொதுநிர்வாகம் குறித்து நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், பல சிறைகளில் ஊழல்களின் ஆதிக்கம் வேரூன்றி காணப்படுவதும், சிறைவாசிகளுக்கு வசதிகள் செய்து தர பணம் கோருவதும், பிரபல ரவுடிகள், தாதாக்களுக்கு துணை புரிவதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் பெற்றுக் கொண்டு கைதிகளை செல்போன், போதை பொருள் பயன்படுத்தஅனுமதிப்பது உள்ளிட்டவையும் தெரிய வந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரித்து துறை ரிதீயில் நடவடிக்கை எடுக்கவும் அறிவிப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.