முதுநிலை நீட் தேர்வில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 11,681 தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இளநிலை NEET தேர்வு தவிர பிற மருத்துவத் தேர்வுகளை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. MD., MS., MDS., PG Diploma படிப்புகளில் சேர முதுநிலை NEET தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த 5-ம் தேதி நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்ற முதுநிலை நீட் தேர்வை 1,60,888 பேர் எழுதிய நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 89,549 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் 11,681 பேரும், கர்நாடகாவில் 9,792 பேரும், மகாராஷ்டிராவில் 8,832 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.