தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
குடமுழுக்கை தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிடக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் அறநிலையத்துறையின் பிரமாணப் பத்திரத்தில் கருவறை உட்பட குடமுழுக்கு நடைபெறும் இடங்களில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தமிழுக்கு முக்கியத்தும் கொடுத்து கடந்த காலங்களைப் போன்றே குடமுழுக்கு நடத்தப்படுவதால் இதில் தலையிட இயலாது என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.
இந்து அறநிலையத்துறை அறிக்கை அடிப்படையில் குடமுழுக்கை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை குடமுழுக்கு முடிந்த 4 வாரங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.