விதிகளை மீறி மருத்துவக்கழிவுகளை கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவக்கழிவுகளை குடியிருப்பு மற்றும் நீர்நிலைகளில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை தடுக்க காலாவதியான மருந்துகள், உடைந்த ஊசி, பாதரச வெப்பமானி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தனி பைகளில் சேகரித்து நகராட்சி ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறி திடக்கழிவுகளுடன் கலந்து மருத்துவக்கழிவுகளை கொட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.