குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், எத்தனை தேர்வுகளில் இப்படி முறைகேடு நடைபெற்றுள்ளது, அதன் ஆணி வேர் எங்கு இருக்கிறது என்பதை தீர விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திடவும் விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடத்திட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இல்லாவிட்டால் திமுக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.