தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் சோதனை முயற்சியாக தூத்துக்குடியிலும் நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை தவிர மற்ற இடங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
எந்த ரேசன் கடைகளிலும் குடும்ப அட்டை தாரர்கள் பொருட்கள் வாங்க வழிவகை செய்யும் இந்த திட்டம் பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.