கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதன்பின்னர், அமைச்சர் எஸ்பி வேலுமணி கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்தினை பாலத்தில் தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும், அவினாசி சாலையில் 9 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.