டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் ஸ்வர்ணா, டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.