கோவை அரசு கலைக்கல்லூரியில் விவேகானந்தர் படத்தை வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் உள்ள காரல்மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் உருவப்படங்களுடன், 4 மாதத்துக்கு முன்பு கணேஷ் என்ற மாணவர் அதன் அருகில் விவேகானந்தரின் உருவப்படத்தை வரைந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி நிர்வாகம் அவரிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் விசாரணை நடத்தியது. இதனால் வருத்தம் அடைந்த மாணவர் கணேஷ் இதுபற்றி பிரதமர் அலுவலகத்திற்கு புகார் கடிதம் அனுப்பினார். அதன்பேரில் கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு, பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.