ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொது விநியோக திட்ட கிடங்குகள், அங்காடிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அத்தியாவசிய பொருட்களின் மாதாந்திர ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை சிறப்பான முறையில் கவனித்து வருமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காமராஜ், மாநிலத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்கள் பெறும் திட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட இருப்பதை சுட்டிக்காட்டினார