பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி வரும் 3ம் தேதி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாள் வரும் பிப்ரவரி 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காலை 10 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்த இருப்பதாக, அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.