திருப்பரங்குன்றம் கோவிலில் வருகிற 4-ஆம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
அந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழாவை ஒட்டி தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 4-ந் தேதிவரை விழா நடைபெறுகிறது. வருகிற 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 4-ந் தேதி தெப்பஉற்சவம் நடக்கிறது.
அன்று கோவிலில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு தெப்பக்குளத்தில் எழுந்தருளுகிறார். பிறகு தெப்பக்குளத்தில் தயாராகும் தெப்பம் மிதவையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.