ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தி.மு.க. சார்பில் நாளை தஞ்சை மற்றும் திருவாரூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நாளை தஞ்சை தபால் நிலையம் முன் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் திட்டமிட்டபடி தடையை மீறி திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தி.மு.க. சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். எனினும் தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.