தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மலைப் பாங்கான மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும் என்றும் கூறப்படுள்ளது.