பத்ம விருதுகளை பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், கர்நாடக இசைப் பாடகர்கள் லலிதா, சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ், சமூக சேவகர் எஸ். ராமகிருஷ்ணன், நாதஸ்வர இசைக் கலைஞர்கள் காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி, விஞ்ஞானம், பொறியியல் பிரிவு பேராசிரியர் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர், மேன்மேலும் பல விருதுகளை அவர்கள் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், பத்ம விருதுகளை பெறுபவர்களுக்கு தமது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.