குடியரசு தினவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் குடியரசு தினவிழாவை ஒட்டி பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நாளை தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தின் முக்கியமான நகரங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.