சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரையும் கொலை நடந்த களியக்காவிளை பகுதிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவ்பிக் ஆகியோரை 10 நாள் காவலில் எடுத்த போலீசார், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அழைத்துச் சென்று கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி மற்றும் முக்கிய ஆவணங்கள் கொண்ட பை ஒன்றையும் மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து கொலை நடந்த இடமான களியக்காவிளை சோதனைச் சாவடிக்கு பயங்கரவாதிகள் இருவரையும் அழைத்து வந்தனர். அங்கு கொலையை நிகழ்த்திவிட்டு, அவர்கள் பள்ளிவாசல் வழியாக தப்பிச் சென்றது வரை போலீசாரிடம் நடித்துக் காட்டினர். 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.