புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறு வரையறைப் பணிகளை பிப்ரவரி 2-ஆம் வாரத்திற்குள் முடித்து அரசாணை வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துள்ளது. 9 மாவட்டங்களிலும் 3 மாதங்களில் தேர்தலை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை வரைவுப் பட்டியலை பிப்ரவரி முதல் வாரத்தில் தயாரித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற அவர் அறிவுறுத்தினார்.
பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் மறுவரையரைப் பணிகளை முடித்து அரசாணை வெளியிடும் வகையில் பணிகளை விரைவாக முடிக்கவும் மாவட்ட நிர்வாகங்களை அவர் அறிவுறுத்தினார்.