நெல்லையில் கிரேன் ஓட்டுநர் கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கரையிருப்பைச் சேர்ந்த கிரேன் ஓட்டுநரான மாசான மூர்த்தி என்பவரை பொங்கல் தினம் முதல் காணவில்லை. அவரது நண்பர் சங்கர் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, பால் கட்டளையில் உள்ள தனியார் தோட்டத்தில் இருவரும் மது அருந்தியதாகவும், பின்னர் மாசான மூர்த்தி போதையில் மயங்கியதால் அங்கேயே அவரை விட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அங்கு சென்ற போலீசார் ஒரு இடத்தில் மண் தோண்டப்பட்டதற்கான தடயம் இருந்ததால் அங்கு தோண்டிப் பார்த்த போது மாசான மூர்த்தியின் உடல் கழுத்து அறுப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
மாசான மூர்த்தியின் நண்பர் சங்கருக்கு இதில் தொடர்பில்லாததை உறுதி செய்த போலீசார், விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், விஜய், பேச்சி ராஜா உட்பட எட்டு பேரை கைது செய்தனர்.
சம்பவத்தன்று இவர்கள் மது அருந்தச் சென்ற போது அங்கு மாசான மூர்த்தி மட்டும் போதையில் இருந்துள்ளார். அவருடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.