மதுரை- போடி நாயக்கனூர் இடையிலான வழித்தடத்தில் உசிலம்பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலும், பிறகு உசிலம்பட்டியிலிருந்து போடி வரையிலும் என மொத்தம் 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 பிரிவுகளாக அகலரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையிலான 37 கிலோ மீட்டர் தூர பணிகள் முடிவடைந்ததால், அந்த பாதையில் சோதனை முறையில் ரயில் இயக்கி பார்க்கப்பட்டது. தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் கே. ஏ. மனோகரன் , மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர். லெனின், முதன்மை நிர்வாக அதிகாரி ஏ.கே. சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகள் ரயிலை இயக்கி ஆய்வு செய்தனர்.