சேலத்தில் தேசிய பெண்குழந்தைகள் தினத்தையொட்டி, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட ராட்சத கோலத்தை 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வரைந்தனர்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள 10 மாவட்டங்களில் மத்திய அரசால் நேரடி நிதி உதவியுடன் பெண்குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டம் 2018ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினவிழா, சேலம்-காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. அங்கு, வாசகங்கள் அடங்கிய ராட்ச கோலத்தை சுற்றி கல்லூரி மாணவிகள் நின்றிருக்க மாவட்ட ஆட்சியர் ராமன் நடுவில் நின்று பலூன்களை பறக்க விட்டார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த ஆட்சியர், தனித்திறமைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.