ராமநாதபுரம் அடுத்த கீழக்கரை கடலில் பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவுநீரையும் நகராட்சி நிர்வாகமே கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
கீழக்கரை கடல்பகுதி மீன்வளம் நிறைந்ததாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்தக் கடல் பகுதியை பாழ்படுத்தும் விதமாக கீழக்கரை நகராட்சியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் கடலில் கலக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இங்கு பாதாள சாக்கடைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று கூறும் சூழல் ஆர்வலர்கள், அதனால் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக கடலில் கலக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். நகராட்சி கழிவுநீர் சேகரிப்பு வாகனத்திலிருந்தே கழிவுநீரை நேரடியாக கடலில் கலப்பதைப் பார்க்க முடிகிறது என்பதால், அதுகுறித்து கேட்டபோது உரிய பதிலளிக்க நகராட்சி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.