தேனி எம்.பி. ரவீந்திரநாத்தின் காரைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளத்தில் அதிமுகவினரும் பாஜகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை இரவு கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ரவீந்திரநாத் எம்.பியின் காரை தடுத்து நிறுத்தி கருப்புக்கொடி காட்டியதோடு, அவரது காரையும் அவரோடு வந்த பாஜகவினரின் காரையும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 50 பேரை போலீசார் கைது செய்து பின்னர் இஸ்லாமியர்களின் போராட்டத்தை அடுத்து விடுவித்தனர்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி காலை பெரியகுளம் தென்கரை காந்தி சிலை முன்பாகவும் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும் அதிமுகவினரும் பாஜகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.