வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், 2 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து நன்கொடை பெறப்படுவது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அக்குழுமத்தினருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி, ஆசிரமம் உள்ளிட்ட 60 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சோதனை நடத்தினர்.
4 நாட்களாக நடைபெற்ற சோதனையின் முடிவில் கணக்கில் வராத 2 கோடி ரொக்கமும், 400 கோடி ரூபாய் சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.