நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விரைவில் தமிழகம் வந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கேசி கருப்பணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கேரளா சுற்றுலாதுறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அதன்பின்னர், மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.