தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த ரவீந்திரநாத் குமாருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன. அதன்படி நேற்று எம்.ஜி.ஆர் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வற்காக கம்பம் சென்ற ரவீந்திரநாத்குமாருக்கு இஸ்லாமியர்கள் கருப்பு கொடி காட்ட முயற்சித்தனர்.
அப்போது அவரது கார் கண்ணாடியை உடைத்ததாக கூறி 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி தேவதானப்பட்டியில் தேனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இஸ்லாமியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து, அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.