மத்திய அரசுடன் தமிழக அரசு சுமுகமான முறையில் இருப்பதால் தமிழகத்துக்கு 9 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மதுரையில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.