இணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு பெறும் வசதி தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேசன் கார்டுகளை தொலைத்தவர்களும், பெயர், முகவரி போன்றவற்றை திருத்தம் செய்ய விரும்புபவர்களும் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி கார்டு தேவைப்படுவோர், பொது வினியோக திட்ட இணைய தளத்தில் நகல் கார்டுக்கு விண்ணப்பிக்க என்ற பகுதிக்கு சென்ற ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் அந்த செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. நம்பரை பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். கார்டு தயாரானதும் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.