பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகாரளித்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கை போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடுவதாக கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பாலியல் வழக்கில் கைதானவர்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரை தாக்கியதாக மணிவண்ணன் என்பவன் உட்பட 4 பேர் கைதாகினர்.
பின்னர் பாலியல் வழக்கிலும் மணிவண்ணன் சேர்க்கப்பட்ட நிலையில் மற்ற மூவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த அடிதடி வழக்கையும் பாலியல் வழக்கையும் சிபிஐ ஒன்றாக விசாரித்து வந்தது.
இந்த நிலையில், போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அடிதடி வழக்கின் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பாலியல் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என சிபிஐ தெரிவித்துள்ளது.