தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி ஊதியத்தை நிர்ணயித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் உதவிப் பேராசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 57,700 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் தேர்வாகும் இணைப் பேராசிரியர்களுக்கு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 400 ரூபாய் நிர்ணியிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெறும் மூத்த பேராசிரியர்களுக்கு ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 200 ரூபாய், பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் தேர்வாகும் முதல்வர் மற்றும் இயக்குநர்களுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 200 ரூபாய் மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.