தஞ்சை பெரியகோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு செய்வது ஆகம விதிக்கு எதிராக இல்லை என்றும், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்ய அரசு முன்வர வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், சிவபெருமான் 64 திருவிளையாடல்களை தமிழ்நாட்டில் தான் நிகழ்த்தியதாகவும், அனைத்து நிகழ்வுகளும் தமிழில் உரையாடியதாகவும் சிவனடியார்கள் கூறுகின்றனர் என்றும், அவர்களின் நம்பிக்கையை மதித்து தமிழில் குடமுழுக்கு செய்வது சரியான செயல் தானே எனவும கேள்வி எழுப்பியுள்ளார்.