தனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சங்க பொதுச்செயலாளர் முகம்மது அலி,
கடும் நஷ்டத்தில் உள்ள ஆவின் நிர்வாகம், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 500 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டார்.
பால் கொள்முதலை ஆவின் நிறுவனம் விரிவுபடுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள், பாலின் கொள்முதல் விலையை உயர்த்தாமல், பாலின் விற்பனை விலையை உயர்த்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.