ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட மக்கள் விரும்பாத எந்த திட்டமும் செயல்படுத்தபடக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில், சாலை பாதுகாப்புவார விழாவை ஒட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தந்தை பெரியார் குறித்த ரஜினியின் கருத்து குறித்த கேள்விக்கு, தேவையில்லாத கருத்துகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.