மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் பொறுப்பு ஊராட்சி பிரதிநிதிகளுக்கு இருப்பதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைதலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் துணைதலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
புனித நதியான கங்கையை சுத்தம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிடம், மத்திய திட்ட அதிகாரிகள் பயிற்சிப் பெற்று சென்றதாகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டார்.