ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் வரும் 30ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடம், ஒரு மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடம், 26 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியிடங்கள், 41 ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பதவியிடங்கள், 266 கிராம ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடங்கள் என 335 பதவியிடங்களுக்கு வரும் 30ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு காலை 10.30 மணிக்கும் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு பிற்பகல் 3 மணிக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.