2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரபிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிடபட்டுள்ளது.
வடமாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டிய ராமதாஸ், இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் அவசியம் என்று கூறியுள்ளார். மேலும் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.