திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 6 நாட்களில் மட்டும் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் வருமான கிடைத்துள்ளது.
இந்தக் கோவிலில் முன்பு திருவிழா நாட்களில் மட்டுமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்ற நிலையில் தற்போது சாதாரண நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. பொங்கல் விடுமுறை தினங்களான கடந்த 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த 6 நாட்களில் டிக்கெட் கட்டணமாக 1 கோடியே 15 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 58 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்த நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 56 லட்சம் ரூபாய் அதிகமாகக் கிடைத்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.