தனியார் பால் மற்றும் தயிர் பாக்கெட்டின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது.
கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், விற்பனை விலையை உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆரோக்கியா, ஹெரிடேஜ், டோட்லா நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், அர்ஜூனா நிறுவனம் லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்படுவதாக மொத்த விற்பனையாளர்களுக்கு பால் நிறுவனங்கள் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பின.
இதைப்போன்று தயிர் விலையும் லிட்டர் 58 ரூபாயில் இருந்து 62 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் 48ல் இருந்து 50 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் 52ல் இருந்து 56 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 60ல் இருந்து 62 ரூபாயாகவும் விலை உயர்ந்து இன்று முதல் விற்பனைக்கு வந்தது.