தூத்துக்குடியில், 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
இதில், 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
சீனாவின் வின்டெக்(Vintech) எனும் மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தை ஸ்ரீபெரும்பதூரில் அமைக்கவும், தென் மாவட்டங்களில் 6 புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கவும், அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.