சேலத்தில் ஸ்டார்ச், மற்றும் ஜவ்வரிசி கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு, ஆலைகளில் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசியாக தயாராகிறது. அவற்றை சேகோசர்வ் எனப்படும் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் மகா சிவராத்திரி பண்டிகை வருவதால் வட மாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் விலை அதிகரித்து டிசம்பர் மாதம் 90 கிலோ ஜவ்வரிசி மூட்டை 4 ஆயிரத்து 150 ரூபாய்க்கும், ஸ்டார்ச் 2 ஆயிரத்து 950 ரூபாய்க்கும் விற்ற நிலையில் தற்போது, ஜவ்வரிசி 4 ஆயிரத்து 425 ரூபாய்க்கும், ஸ்டார்ச் 3 ஆயிரத்து15 ரூபாய்க்கும் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்து, ஒரு டன் ரூபாய் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது ரூபாய் 9 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Also Read : பழனி முருகன் கோயிலில் மூலவர் சிலைக்கு மருந்து சாத்தப்படுவதால் நடை அடைப்பு
Watch Polimernews Online : https://bit.ly/35lSHIO