மதுரை மாவட்டம் கொக்குடையான்பட்டியில் தன்னை காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவியை அதே பகுதியில் வசிக்கும் மதன்குமார் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததுடன், தன்னை காதலிக்குமாறு மாணவியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அறிந்த மாணவியின் தாய், மதன்குமாரை அழைத்து கண்டித்துள்ளார்.
Also Read : குடும்பத்துடன் தற்கொலை... சில தினங்களில் நடைபெறவிருந்த திருமணம் நின்றது..!
இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், மாணவியையும் அவரது தாயாரையும் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மதன்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Watch More ON : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg