திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில், 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பெரியகோயில் என்றழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் மூலவர் வன்மீக நாதர் சன்னதி எதிரே இருந்த 98 ஆண்டு பழமை வாய்ந்த கொடிமரம் பழுதடைந்தது.
இதனால் கேரளா மாநிலத்தில் பலா என்ற மலைப்பகுதியில் இருந்து 54 அடி உயர தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு, ஆகம விதிப்படி புதிய கொடி மரம் உருவாக்கப்பட்டது.
இதையடுத்து பழைய கொடிமரம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் இன்று காலை சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, நவரத்தினங்கள் வைத்து புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.