தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அடுத்த மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதால், அதற்கான தயாரிப்புப் பணியில் நிதியமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பாகவும் அதில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தொழில் திட்டங்களுக்கான அனுமதிகளும், நிலங்கள், மானியங்கள் அளிப்பதற்கான முன்மொழிவுகளும் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.