செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அண்ணா பல்கலை - அமைச்சர் கருத்து

Jan 19, 2020 07:03:41 PM

அண்ணா பல்கலைகழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவை அவசரப்பட்டு எடுக்கமாட்டோம் என்றும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 அமைச்சர்கள் கொண்ட குழுவோடு 2வது கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அமைச்சர் அன்பழகன் கூறினார்.

வேலூர் மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் “தேசிய விண்வெளி சவால் 2020” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 7 மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 60 பேர் 12 குழுக்களாகப் பிரிந்து ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் 50 கிராம் எடை கொண்ட சிறியவகை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தினர்.

சுமார் 20 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்படும் இந்த பலூன், 3 மணி நேரம் கழித்து வெடித்துவிடும் என்றும் அதிலிருக்கும் குட்டி செயற்கைகோள் பாராஷூட் மூலம் தரையிறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதிலுள்ள சிப்பை ஆய்வு செய்தால் காற்றுமாசு, தட்பவெட்ப நிலை உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளலாம் என அதனை வடிவமைத்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் துணைதலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக அறிவித்து, மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஆயிரம் கோடியை அறிவித்துள்ளது என்றும் ஆனால் அதற்கு 2 ஆயிரத்து 570 கோடி தேவைப்படுகிறது என்றும் கூறினார். 


Advertisement
பக்தர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க தரிசன டிக்கெட்டை விரைவாக பரிசோதிக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிமுகம்...
அஸ்வின், சூர்யதேவ் டி.எம்.டி., விஸ்வநாதன் ஆனந்த், எக்கு தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக நியமனம்
புல்வெளிகளிலும், வீடுகள், வாகனங்கள் மீதும் படர்ந்த உறைபனி... வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாக பதிவு
முதல் முறையாக தொகுதி மக்களின்குறைகளை கேட்கச் சென்ற எம்.பியிடம் பெண்கள் குற்றச்சாட்டு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 17 மீனவர்கள் சிறைப்பிடிப்பு... இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
கேரளாவில் இருந்து இறைச்சிக்கழிவுகளை ட்ரக்கில் ஏற்றி வந்த 3 பேர் கைது
எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்
திருச்சி காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள்
கிருஷ்ணகிரியில் ரெனால்ட் டஸ்டர்' காரில் வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள்.. வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Advertisement
Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்

Posted Dec 24, 2024 in இந்தியா,Big Stories,

மரம் அறுக்கும் எந்திரத்தால் வீடு புகுந்து கழுத்தை அறுத்த “டெலிவரி டேஞ்சர் பாய்”..! தனியாக இருக்கும் பெண்களே உஷார்

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்


Advertisement