வேலூரில் காதல் ஜோடியை கஞ்சா போதையில் தாக்கிவிட்டு, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வரும் அஜித் என்ற இளைஞரும் அதே கடையில் பணிபுரிந்து வரும் இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இருவரும் கோட்டைப் பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததாகவும் அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அஜித்தை தாக்கிவிட்டு, இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றதாகவும் கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பிய அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கஞ்சா கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.