வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற மாடுவிடு திருவிழாவின் போது மாடு முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் படுகாயமடைந்தார்.
குட்லவாரிபல்லி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவினை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மைதானத்தில் சீறி பாய்ந்து வந்த காளை ஒன்று, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரதராமி காவல் உதவி ஆய்வாளர் சங்கரை முட்டி தூக்கிவீசியது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
சங்கர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில், பார்வையாளருக்கான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.