செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மகனை கொலை செய்துவிட்டு, தந்தை தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
முத்திகை நல்லான்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் - சுந்திரி தம்பதியர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதுபோதையில் பாலகிருஷ்ணன் நேற்று வீட்டிற்கு வந்ததால், தம்பதியருக்குள் தகராறு ஏற்பட்டு, சுந்திரி கோபித்துக்கொண்டு அருகாமை பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இளைய மகன் தேவா, நண்பர்களுடன் விளையாடிவிட்டு இரவு வீட்டிற்கு சென்றபோது, அங்கு தனது சகோதரர் வெற்றிவேலை தந்தை தூக்கில் தொங்கவிடுவதையும், அதனை தொடர்ந்து அவரும் மற்றொரு தூக்கில் தொங்க முயல்வதையும் பார்த்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேவா விரைந்து சென்று தனது தாயிடம் தெரிவித்துள்ளான். சுந்திரி குடும்பத்தினர் விரைந்து வந்து பார்த்த போது இருவரும் உயிரிழந்துள்ளனர்.